போதகர் வந்து விட்டார்
உன்னைத் தான் அழைக்கிறார்
எழுந்து வா (4)
1.
கண்ணீர் கடலில் ழூழ்கி
கலங்கி தவிக்கிறாயோ
கலங்காதே திகையாதே
கர்த்தர் உன் அடைக்கலம் மகளே – போதகர்
2.
பாவச்சேற்றில் மூழ்கி
பயந்து சாகிறாயோ
தேவ மைந்தன் தேடுகிறார்
தேற்றிட அழைக்கிறார் மகளே- போதகர்
3.
கல்வாரி சிலுவையைப் பார்
கதறும் இயேசுவைப் பார்
உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
உன் துக்கம் சுமந்து கொண்டார் – போதகர்
4.
துன்பம் துயரம் உன்னை
சோர்வுக்குள் ஆக்கியதோ
அன்பர் இயேசு அழைக்கிறார்
அணைக்கத் துடிக்கிறார் – போதகர்